ப. தெர தீயக3 ராதா3 லோனி
திருபதி வெங்கட ரமண மத்ஸர(ம)னு
அ. பரம புருஷ த4ர்(மா)தி3 மோக்ஷமுல
பார தோ3லு(சு)ன்னதி3 நா லோனி (தெர)
ச1. மத்ஸ்யமு(யா)கலி கொனி காலமுசே
மக்3ன(மை)ன ரீதி(னு)ன்னதி3
அச்சமைன தீ3ப ஸன்னிதி4னி மரு-
(க3)ட்3ட3படி3 செரசினட்(டு)ன்னதி3 (தெர)
ச2. இர(வொ)ந்த3 பு4ஜியிஞ்சு ஸமயமுன
ஈக3 தகு3லு ரீதி(னு)ன்னதி3
ஹரி த்4யானமு ஸேயு வேள சித்தமு
அந்த்யஜு வாட3கு போயினட்(டு)ன்னதி3 (தெர)
ச3. வாகு3ர(ம)னி தெலியக ம்ரு2க3 க3ணமுலு
வச்சி தகு3லு ரீதி(னு)ன்னதி3
வேக3மே நீ மதமு(ன)னுஸுரிஞ்சின
த்யாக3ராஜ நுத மத3 மத்ஸர(ம)னு (தெர)
திருப்பதி வேங்கடரமணா! காழ்ப்பெனும் (எனது) உள்
திரையை நீக்கலாகாதா?
பரம்பொருளே! அறம் முதலாக வீடு
ஆகியவற்றைவிரட்டியடிக்கின்றது;காழ்ப்பெனும் எனது உள்
திரையை நீக்கலாகாதா?
1. மீன் பசிகொண்டுச் சாவின் மடியில்
புகுவது போன்றுளது;
திறந்த விளக்கொளிரும் சன்னிதியினில் திரை
குறுக்கிட்டுக் (கடவுளைச்) சிறையிட்டதுபோன்றுளது;
(எனவே)காழ்ப்பெனும் எனது உள் திரையை நீக்கலாகாதா?
2. நன்றாக உண்டியுண்ணும்போது,
ஈயமர்ந்தது போன்றுளது;
அரியைத் தியானிக்கும்போது மனது
சேரிக்குச் சென்றது போன்றுளது;
(எனவே)காழ்ப்பெனும் எனது உள் திரையை நீக்கலாகாதா?
3. கண்ணியென் றறியாது மான் கூட்டம்
வந்தகப்பட்டது போன்றுளது;
தாமதிக்காது நினது வழி நின்றத்
தியாகராசனால் போற்றப்பெற்றோனே! செருக்கு, காழ்ப்பெனும்
(எனது) உள் திரைகளை நீக்கலாகாதா?
அறம், வீடு ஆகியவை - அறம், பொருள், இன்பம், வீடு
மீன் பசிகொண்டு - தூண்டிலிரையை உணவென்றெண்ணி
Wednesday, December 24, 2008
Neyveli Santhanam - 1.1 - tera teeyaga rAdA - gowLipantU - mArgazhi mahA utsavam 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment